அன்பாலய வெளியீடுகள் மற்றும் அன்பாலயத் தெய்வங்களைப் போற்றித் துதித்துக் கொண்டாடும் வகையில், சித்திரை மாதம் முழுவதும் சில போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் சிறப்பாய் நடைபெற இருக்கின்றன.
இந்தப் போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் ஆத்ம லிங்க பூஜை மேற்கொண்ட சீடர்கள் 12 அணிகளாகவும்,
லிங்க பூஜையை மேற்கொள்ளாத அன்பு பக்தர்கள் ஒரு அணியாகவும் (ஸ்ரீ பிரம்மர் அணி) மொத்தம் 13 அணிகளாகப் பங்கு கொள்ளலாம்.
ஆதி மகா கணபதி அணி
ஸ்ரீ அகத்திய மகரிஷி அணி
சிவசக்தி அணி
ஆதி மகா சரஸ்வதி அணி
ஸ்ரீ ஏழுமலையான் அணி
திரு அண்ணாமலையார் அணி
ஸ்ரீ ஞான ஆஞ்சநேயர் அணி
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அணி
ஸ்ரீ ஹயக்ரீவர் அணி
ஸ்ரீ ஹரிஹர ஐயப்பன் அணி
ஸ்ரீ கால பைரவர் அணி
12 தெய்வங்கள் அணி
ஸ்ரீ பிரம்மர் அணி
அதாவது, ஒரு பேச்சு போட்டி நடத்தப்பட்டால், அதில் தனி நபராகப் பங்கு கொள்வதற்குப் பதில் ஒரு அணியின் சார்பாகப் பங்கு கொள்ள வேண்டும். உதாரணமாக, ஸ்ரீ கிருஷ்ணர் குழுவைச் சார்ந்த ஒருவர் அந்த அணியின் சார்பில் பங்கு கொள்ளலாம். போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் அணிகளுக்கு இடையே நடைபெறும்.
"ஒரு நபர், தனது அணிக்கு வழங்கும் தனிப்பட்ட பங்களிப்பை ஊக்குவிக்கும் பொருட்டு, அணியின் சார்பில் அவர் பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில், அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் 3 நபர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்."
துவங்கும் நாள்: ஏப்ரல் 14
ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஆத்ம காயத்ரி மந்திர உச்சாடனத்தைத் தங்கள் அணி உறுப்பினர்களோடு இணைந்து (online meeting) குழுவாக மேற்கொண்ட பின், 21 நிமிட இராஜமுத்திரை தியானம் மேற்கொள்ள வேண்டும்
ஓர் அணியினை சேர்ந்த ஒரு நபர் குறைந்தது 21 நாட்கள் மந்திர உச்சாடனம் மற்றும் தியானத்தில் கலந்துகொண்டால் மட்டுமே அவர் இப்போட்டியில் பங்கேற்றார் என மதிப்பெண் வழங்கப்படும்.
ஒவ்வொரு நாளும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையைக் கண்காணித்துப் பதிவு செய்யப்படும்.
30 நாட்களின் முடிவில், பங்கேற்பாளர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையின் அடிப்படையில் எந்த அணி வெற்றி பெற்றது என அறிவிக்கப்படும்.
துவங்கும் நாள் ஏப்ரல் 14
ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு அணியில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து திரிஞானம் நூலினை ஒருவர் வாசிக்க, மற்ற அனைவரும் கேட்க வேண்டும். (online meeting)
ஒவ்வொரு அத்தியாயத்தையும் வெவ்வேறு நபர்கள் வாசிக்க வேண்டும்.
குறைந்தது ஒரு அத்தியத்தை வாசிப்பவர்கள் மட்டுமே இப்போட்டியில் கலந்துகொண்டதாக கருதப்பட்டு மதிப்பெண் வழங்கப்படும்.
அனைத்து அத்தியாயங்களும் வாசிக்கப்பட்ட பிறகு, அந்த அணியில் எத்தனை நபர்கள் நூல் வாசிப்பதிலும், எத்தனை நபர்கள் பங்கேற்பாளராகக் கலந்துகொண்டனர் என்ற அடிப்படையில் வெற்றி பெற்ற அணி அறிவிக்கப்படும்.
போட்டி நாள்: ஏப்ரல் 26
அன்பாலயத்தில் வெளியிடப்பட்ட 48 தின ஆத்ம காயத்ரி நோன்பு அருளுரைகளில் (2023 & 2024) இருந்து இணைய வழியில் வினா விடைத் தேர்வு நடத்தப்படும்.
இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவர்கள், மூன்று நபர்களைக் கொண்ட ஒரு குழுவாகப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்.
அனைத்து தெய்வங்களின் அணியினைச் சார்ந்தவர்களுக்கும் ஒரே நேரத்தில் இணையதள வாயிலாகப் போட்டி நடைபெறும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்களாகவும் இணைந்து ஓர் தெய்வத்தின் அணியிலிருந்து இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.
அதிக மதிப்பெண்களைப் பெறும் அணி வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும்.
போட்டி நாள்: ஏப்ரல் 27
கடந்த இரண்டு ஆண்டுகள், சத்குரு அகத்திய மகரிஷிகள் அருளிய ஆத்ம காயத்ரி நோன்பு அருளுரைகளில் இருந்து ஆத்ம காயத்ரி மந்திரத்தின் பயன்களை எடுத்துரைக்கும் வகையில் ஓர் பவர்பாயிண்ட் விளக்கக் காட்சியினை (PowerPoint presentation with minimum 10 slides) வழங்கவேண்டும்.
பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பினைத் தேர்வு செய்து ஒவ்வொரு தெய்வ அணியிலிருந்தும் மூன்று நபர்கள் அடங்கிய குழுக்களாக இப்போட்டியில் பங்கு கொள்ளலாம்.
ஓர் தெய்வத்தின் அணியிலிருந்து ஒன்றிற்கும் மேற்பட்ட குழுக்களும் இப்போட்டியில் பங்கு கொள்ளலாம்.
அதிக மதிப்பெண் பெறும் அணி வெற்றி அணியாக அறிவிக்கப்படும்.
தலைப்பு
முக்தி அளிக்கும் ஆத்ம காயத்ரி மந்திரம்
பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஆத்ம காயத்ரி மந்திரம்
வணிக வளர்ச்சிக்கு உதவும் ஆத்ம காயத்ரி மந்திரம்
நோய்களைக் குணப்படுத்தும் ஆத்ம காயத்ரி மந்திரம்
மன அழுத்தம் குறைக்கும் ஆத்ம காயத்ரி மந்திரம்
குடும்ப நலம் பேணிக்காக்கும் ஆத்ம காயத்ரி மந்திரம்
உள்ளார்ந்த அமைதிக்கு ஆத்ம காயத்ரி மந்திரம்
சமர்ப்பிக்கும் கடைசித் தேதி: மே 14
இதுவரை வெளிவந்த அன்பாலயப் படைப்புகளில் இருந்து முக்கியக் குறிப்புகளைச் (Quotes) சேகரிக்க வேண்டும்.
சேகரிக்கும் குறிப்புக்கள் (Quotes) தனி தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். வேறு ஒரு வாசகத்தை படித்திருந்தால் மட்டுமே இந்த வாசகம் புரியும் என்ற நிலையில் இருக்கக்கூடாது.
ஒரு தெய்வத்தின் அணியிலிருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் பங்கு கொள்ளலாம்.
அதிகக் குறிப்புகளைச் சேகரிக்கும் அணியே வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும்.
சமர்ப்பிக்கும் கடைசித் தேதி: மே 14
இது நாள் வரை அன்பாலயத்தை பின்தொடர்வதன் மூலம் தங்களுக்கு கிடைத்த தனிப்பட்ட அனுபவங்களைக் குறித்து ஆயிரம் வார்த்தைகளுக்குக் குறையாமல் கட்டுரையினை எழுதிச் சமர்ப்பிக்க வேண்டும். (PDF)
ஒரு அணியைச் சார்ந்து ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொள்ளலாம்.
பங்கேற்பாளர்கள் எழுதிய கட்டுரையினை info.anbaalayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ஒரு அணியினைச் சார்ந்து எத்தனை நபர்கள் கலந்து கொண்டார்கள் மற்றும் கட்டுரையின் உண்மை தன்மைக்கேற்ப மதிப்புகள் வழங்கப்பட்டு வெற்றி பெற்ற அணி அறிவிக்கப்படும்.
சமர்ப்பிக்கும் கடைசித் தேதி: மே 14
அன்பாலயம் மற்றும் அதனை இயக்கும் சத்குரு அகத்திய மகரிஷிகளின் சேவகர்கள் ஆகிய இரு அமைப்புகளில் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கக்கூடும் எனத் தாங்கள் கருதும் செயல்பாடுகளைக் சுட்டிக் காண்பித்து அமைப்புகளின் செயல் திறனை மேம்படுத்த ஓர் கடிதத்தை எழுத வேண்டும்.
நீங்கள் எழுதும் கடிதம் அன்பாலயத்தில், பயன்படாத முறைகளை நீக்கிச் செயல் திறனை மேம்படுத்த உதவிட வேண்டும்.
ஒரு தெய்வத்தின் அணியின் சார்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இப்போட்டியில் பங்கு கொள்ளலாம்.
உண்மையான கருத்துக்களை வழங்கும் அணிக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
அக்கடிதத்தினைத் தங்களுடைய பெயரைக் குறிப்பிடாமல், தாங்கள் எந்த தெய்வத்தின் அணியினைச் சார்ந்தவர் என்பதனைக் குறிப்பிட்டுப் பின்வரும் விலாசத்திற்கு அனுப்பி வைக்கவும்.
முகவரி
போட்டி நாள் : மே 4
இறைப்பணி அல்லது தங்களது அணியின் தெய்வத்தின் முக்கிய போதனைகள் என்னும் இரு தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பை தேர்வு செய்து அதனை குறித்து ஆன்லைன் மீட்டிங் வாயிலாக சத்சங்கம் செய்ய வேண்டும்.
ஒரு தெய்வத்தின் அணியில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களும் இப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
சிறந்த பேச்சுத் திறமை, பார்வையாளர்களை ஈர்க்கும் திறன், அன்பாலயச் செய்தியின் உண்மைத் தன்மை மாறாமல் எடுத்துரைப்பது, சிறந்த உதாரணங்களை மேற்கோள் காட்டுவது போன்ற செயல்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கி வெற்றி பெற்ற அணி அறிவிக்கப்படும்.
சமர்ப்பிக்கும் கடைசித் தேதி: மே 14
வரவிருக்கும் அன்பாலயத்தின் அடுத்த உன்னத வெளியீடான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அருளும் "கலியுக சாஸ்திரம்" என்னும் நூலுக்கான அட்டைப்படம் வடிவமைக்க வேண்டும்.
அட்டைப் படத்தினைப் பின்வரும் கருத்துக்களை மையமாக வைத்து உருவாக்கி இருக்க வேண்டும்.
சத்திய யுகம்:
மலையின் உச்சிப் பகுதியில் இயற்கையோடு ஒன்றித் தவ நிலைகளை ஏற்று முக்தி பெற்ற ஆன்மாக்களாய் வாழும் மக்கள்.
கலியுகம்:
பூமியின் தரைத்தளத்திற்குக் கீழ், பாதாளத்தில் நவீன இயந்திரங்களின் உதவியோடும், இயற்கையான சூரிய ஆற்றல் பெற இயலாத நிலையில் தனித்து வாழும் மக்கள்.
ஓர் தெய்வத்தின் அணியிலிருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.
சிறந்த படைப்பினை உருவாக்கும் அணி வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும்.
சமர்ப்பிக்கும் கடைசித் தேதி: மே 14
இதுவரை அன்பாலய அருளுரைகளில் எந்த எந்த திருக்கோயிலின் தெய்வங்கள் அருளுரை வழங்கி இருக்கிறார்கள் என்பதையும், அக்கோயில்களின் வரலாறு என்ன என்பதனையும், வழங்கிய முக்கியச் செய்தி என்ன என்பதனையும் எழுத்து வடிவில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஓர் தெய்வத்தின் அணியினைச் சார்ந்து ஒன்றிற்கும் மேற்பட்ட நபர்களும் பங்கு கொள்ளலாம்.
முக்கியச் செய்திகளை அழகாய்க் கட்டமைத்து எழுதிச் சமர்ப்பிக்கும் அணிக்கு அதிக மதிப்பெண்கள் அளித்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
போட்டி நாள் : மே 11
அன்பாலயத்தை பற்றிய விழிப்புணர்வைப் பொதுமக்களிடையே பரப்புவதற்கான செலவு குறைந்த வழிகள் குறித்து ஒரு பவர்பாயிண்ட் விளக்கக் காட்சியை உருவாக்கவேண்டும்.
வரையறுக்கப்பட்ட வளங்களைப் (limited resources) பயன்படுத்தி மேற்கொள்ளக் கூடிய திட்டங்கள் அல்லது புதிய யோசனைகளை முன்மொழியலாம். அல்லது இதே போன்ற திட்டங்களைக் கொண்ட வெற்றிகரமான நிறுவனங்களை மேற்கோள் காட்டலாம்.
ஒரு குழுவில் 3 நபர்கள் இருக்கவேண்டும். ஒரு தெய்வத்தின் அணியிலிருந்து ஒன்றிற்கும் மேற்பட்ட 3 நபர்கள் அடங்கிய குழுக்களும் பங்குகொள்ளலாம்.
விரிவான பகுப்பாய்வுடன் கூடிய விளக்கக் காட்சிகள் அதிக மதிப்பெண்களைப் பெறும்.
சமர்ப்பிக்கும் கடைசித் தேதி: மே 14
அன்னை சாரதா தேவி வழங்கிய திரிஞானம் நூலினை, தங்களுக்கு மிகவும் புலமைமிக்க ஏதேனும் மாற்று மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும்.
ஓர் தெய்வத்தின் அணியினைச் சார்ந்த நபர்கள் தங்களுக்குள் கலந்துரையாடி விருப்பம் உள்ள 3 நபர்கள் ஒன்று கூடி ஒரு குழுவாய் இணைந்து மொழிபெயர்ப்பினைச் செய்ய வேண்டும். ஓர் தெய்வத்தின் அணியிலிருந்து ஒன்றிற்கும் மேற்பட்ட குழுக்களும் பங்கு பெறலாம்.
ஓர் தெய்வத்தின் அணியிலிருந்து மொழிபெயர்ப்பு செய்பவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளிலும் மொழிபெயர்ப்பினை செய்யலாம்.
சரியான மொழிபெயர்ப்பு மற்றும் பிழையில்லாமல் மொழிபெயர்ப்பு செய்திருத்தலைக் கணக்கில் கொண்டு சிறப்பாக செயல்பட்ட அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
போட்டி நாள் : மே 18
சத்குரு அகத்திய மகரிஷிகளால் 12 அணிகளாக ஒன்றிணைந்து இறை பணியினை ஏற்கும் அன்பு ஆன்மாக்கள் தங்களது அணியின் தெய்வத்தின் முக்கிய பணி என குறிப்பிடப்பட்டுள்ள செயல்திட்டங்களைச் செம்மையாய் உருவாக்குவதற்காக, ஒவ்வொரு அணியும் ஒரு குறிப்பிட்ட துறையினை ஆராய்ந்து செயல் திட்டம் ஒன்றினை சமர்ப்பிக்க வேண்டும். (2000 வார்த்தைகளுக்கு மேல்)
ஓர் குறிப்பிட்ட துறையினைச் சார்ந்த இடங்களுக்கு நேரடியாக சென்று தகவல்களைச் சேகரித்து செயல்திட்ட அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும்.
தாங்கள் மேற்கொண்ட செயல் திட்ட அறிக்கையினைக் குறித்து விளக்கம் அளிப்பதற்காகப் பவர் பாயிண்ட் ப்ரசென்டேஷன் வழங்க வேண்டும்.
மூன்று நபர்கள் இணைந்து ஒரு குழுவாகக் கலந்து கொள்ள வேண்டும். ஓர் தெய்வத்தின் அணியிலிருந்து ஒன்றிற்கும் மேற்பட்ட குழுக்களும் பங்கு பெறலாம்.
சிரத்தையுடன் கள ஆய்வு செய்து விரிவான திட்டங்களை வழங்கும் அணிக்கு அதிக மதிப்பெண் வழங்கி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
தலைப்பு
ஏழுமலையான் அணி - மூலிகை மருந்து உற்பத்தி மையம் (குறைந்தது 10 தயாரிப்புகள்)
கிருஷ்ணர் அணி - கோஷாலை (குறைந்தது 100 மாடுகள்)
ஆஞ்சநேயர் அணி - முதியோர் இல்லம் (குறைந்தது 100 வசிப்போர்கள்)
ஐயப்பன் அணி - அன்னச் சத்திரம் (ஒரே நாளில் 500 உணவுகள்)
கணபதி அணி - ஆன்லைன் அங்காடிக்கான களஞ்சியப் பிரிவு
சரஸ்வதி அணி - பதிப்பகம் மற்றும் அச்சிடும் வசதிகள்
ஹயக்ரீவர் அணி - செம்பு உற்பத்திப் பிரிவு (copper casting and molding unit)
காலபைரவர் அணி - தியான மையம் (குறைந்தது 10 ஏக்கர்)
சிவசக்தி அணி - ரசமணி அல்லது குளிகை உற்பத்திப் பிரிவு
அண்ணாமலையார் அணி - மொபைல் செயலி பயன்பாட்டுடன் கூடிய அமைப்பு
அகத்தியர் அணி - கோவில் (குறைந்தது 2 ஏக்கர் நிலம்)
12 தெய்வங்கள் அணி - ஆசிரமம் (குறைந்தது 10 ஏக்கர் நிலம்)
பிரம்மர் அணி - தியான மையம், கோவில் அல்லது ஆசிரமம்
சித்திரைத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள்
சங்கீதா பரமசிவம் 9840968377
சதீஷ்குமார் 9094061230
பாலாஜி முரளிதரன் 8807404179
தனஞ்செயன் 9791584025