காருண்யம்
அன்பாலயத்தின் கருவறையில் வீற்றிருக்கும் இறைவனே காருண்யமாகும். ஏனெனில் இறைவன் ஒருவனே அனைத்து ஆன்மாக்களையும் மீட்டிடும் திறன் பெற்றவர். காருண்யம் என்பது இறைவனின் ஆற்றல் ஆகிய ஆன்மாவின் அன்பினில் திளைத்து இப்பிரபஞ்சத்தின் பேரறிவினை கருணையாக ஏற்று, தன் நிறைவு காண்பதுடன் பிறர் நிறைவிற்கும் உதவிகள் புரிகின்ற நிலையாகும்.
காருண்யம் என்பது ஒவ்வொரு ஆன்மாவின் உள்ளும் கருவறை போன்ற மைய ஆற்றலாய் நிலைத்திருக்கும். அதுவே பரமாத்மாவின் பேரொளியும் ஆகும். அத்தகைய பேரொளி அணைத்து மானுடர்களுக்கும் உள் ஒளியாய் நிலைத்திருக்கும் என்பதே சத்தியமாகும்.
ஆன்மாவின் மூல மைய ஆற்றலான காருண்யம் என்பது பரம்பொருளின் ஆற்றலாகும். அதனை தீண்டியவர்கள் யாவருமே இறைவனுக்கு ஒப்பானவர்கள். காருண்ய ஆற்றல் பெருகியவர்கள் யாவரும் பிற ஆன்மாக்களின் துயரங்களை எளிதாய் உணர்வதுடன், அதனை நீக்கி அருளும் ஆற்றல்களையும் பெற்றிருப்பர். பிற மானுடர்களின் உடல் கழிவுகள், உயிர் கழிவுகள் மற்றும் ஆன்ம கழிவுகளை நீக்கி அருளும் ஆற்றலே இறைவனின் அழித்தல் எனும் தொழிலுக்கு ஒப்பானது. உடல் பிணிகளை நீக்கிட ஆன்மாவின் மையத்தில் உள்ள பரமாத்மாவின் பேரருள் அவசியமாகின்றது. தனது மூல மைய ஆற்றலை உணர்ந்தவர்கள் காருண்ய மூர்த்திகளாவர். அவர்களே சிவத்திற்கு ஒப்பானவர், சிவமே காருண்ய ஆற்றலுமாகும்.
காருண்ய சிவ ஆற்றலை உணர்ந்தவர்களே பிறர் துயரங்களை நீக்கி, திரைகளையும் விலக்கி, பேரானந்த நிலையினை அருளிடுவர். அன்பு ஆலயத்தின் கருவறையில் உள்ள மூலவராம் பரம்பொருளினை உணர்ந்தவர்கள் யாவரும் காருண்ய மூர்த்திகளாய் மலர்வர். உலகின் ஒவ்வொரு உயிர்களும் தழைக்கவும், முக்தி பெறவும் அதனின்று கழிவுகள் நீக்கம் பெறுவது ஒன்றே மார்க்கமாக அமையும்.
அன்பு ஆலயத்தின் வாயில்களை திறப்போர் கருணை எனும் இறைவனின் பேரறிவினை பெற்று, பரமாத்மாவின் காருண்ய ஒளியினையும் பெற்று உலகில் வாழ்கின்ற அனைத்து ஆன்மாக்களையும் விடுவித்தே அருளிடுவர். பலருக்கு உடல் நோய்களிலிருந்து முக்தி வழங்கப்படும், பலருக்கு உயிரின் தேவைகள் பூர்த்தியுறும். இதனை கடப்பவர்களே ஆன்ம நிர்ணயத்தினை உணர்ந்து பூர்த்திவுரசெய்திடுவர். அவர்களே இறைவனுக்கு ஒப்பானவர்களாகவும் மலர்ந்திருப்பர். வெவ்வேறு ஆலயங்களில் பூத்த மலர்களும் பரம காருண்ய ஆற்றலினை பெற்றுவிட அன்பாலயம் எனும் எமது இல்லத்தில் பிரவேசித்திடவே அகத்தீசனாகிய யாம் அன்போடு அழைக்கின்றோம், பூரண ஆசிகளையும் பொழிகின்றோம்.
அருளியவர்
அகத்திய மகரிஷிகள்
உயர் ஆற்றல்கள் அருளும் மூலிகை மருத்துவத்தை "காருண்யம் ஹெர்பல்ஸ்" (Karunyam Herbals) என்ற தலைப்பின் கீழ் இந்த இணையப்பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.