அனந்த கோடி அன்புகள்...
சத்குரு அகத்திய மகரிஷிகள் தலைமை மற்றும் முதன்மை குருவாக நிலை நின்று வழிநடத்தும் அன்பாலயத்திற்குத் தங்களை வரவேற்கிறோம்.
சத்குருவின் தலைமையில் நடைபெறும் அன்பாலய நிகழ்வுகள் அனைத்தும் 12 தெய்வங்களால் வழி நடத்தப்படுபவை ஆகும்.
சத்குரு அகத்திய மகரிஷிகள் தலைமை மற்றும் முதன்மை குருவாக நிலை நின்று வழிநடத்தும் அன்பாலயத்திற்குத் தங்களை வரவேற்கிறோம்.
சத்குருவின் தலைமையில் நடைபெறும் அன்பாலய நிகழ்வுகள் அனைத்தும் 12 தெய்வங்களால் வழி நடத்தப்படுபவை ஆகும்.
ஆத்ம லிங்கம் என்றால் என்ன?
லிங்கம் என்றால் எல்லையில்லா அகண்ட பிரம்மாண்டப் பிரபஞ்சத்தினைக் குறிப்பதே ஓர் லிங்க வடிவமாகும். ஓர் லிங்கத்தினை வழிபடுவது என்பது இப்பிரபஞ்சப் பேரறிவை வணங்குவதாகும்.
ஆத்ம லிங்கம் என்றால் ஓர் லிங்க வடிவத்தில், இப்பிரபஞ்ச இயக்கப் பேரறிவின் மூலக் கருப் பொருளான, வீரிய காந்த சக்தி மிகுந்த சில ஆன்ம அணுத் துகள்கள் பிரதிஷ்டை கொண்டிருக்கும்.
சத்குரு அகத்திய மகரிஷிகள் அருளிய 108 ஆத்ம லிங்கங்களில், சத்குரு அகத்திய மகரிஷிகளின் ஆன்மாவின் துகள்களும் மற்றும் பல்வேறு தெய்வங்களின் துகள்களும் பிரதிஷ்டை கொண்டிருக்கும்.
வேண்டியதை வேண்டிய வண்ணம் அருளக்கூடிய சக்தி நிறைந்த ஆத்ம லிங்கத்தினை இராவணன் கடும் தவம் புரிந்து, ஈசனிடம் இருந்து பெற்றார் என்று நாம் அறிந்ததே.
ஆனால், கலி எல்லை என்னும் கனிந்த காலம் உருவாகி உள்ளதாலும், கலியுகத்தினை நிறைவு செய்யும் கல்கி அவதாரம் என்னும் பொறுப்பினை நம் சத்குருவானவர் ஏற்றுள்ளதாலும், அவர்தம் பெரும் கருணையினால் பேரறிவு மிக்க அளப்பரிய சக்தி நிறைந்த அகத்தியரின் ஆன்மத் துகள்கள் பிரதிஷ்டை கொண்ட ஆத்ம லிங்கங்களை அன்பாய் அருளியுள்ளார்.
அற்புதங்கள் நிறைந்த சக்தி வாய்ந்த அகத்தியரின் ஆத்ம லிங்கங்களை நாம் வழிபடுவதன் மூலம்
கலியுகத்தை நிறைவு செய்யும் பொருட்டு, அகண்ட பிரம்மாண்டப் பிரபஞ்சத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் உயர்நிலை ஆன்மாக்கள் உங்களது ஆன்மாவின் உதவி கொண்டு இப்பூவுலகில் பிரதிஷ்டை கொள்வர். இதன் மூலம் பூமியின் புணரமைப்பு நடைபெறும்.
வீரியமிக்க சக்தி வாய்ந்த மின்காந்த அலைவரிசைகளை உடைய உயர்நிலை ஆன்மாக்களால், உங்களது வாழ்வின் செம்மையான இயக்கம் நடைபெறத் தடையாய் நிற்கும் மாய, கர்ம, ஆணவத் திரைகள் வலுவிழந்து வாழ்க்கை செம்மை அடையும்.
இப்பூவுலக வாழ்விற்குப் பின்னர், மீண்டும் மீண்டும் பிறக்கும் சுழற்சியில் இருந்து விடுபட்டு விடுதலையாகி நித்தியப் பேரானந்தம் சித்திக்கும்.
அகத்திய மகரிஷிகள் உங்களைச் சீடனாய் ஏற்றுக்கொண்டு, பல்வேறு இறைப் பணிகளை ஆற்றிடும் பெரும் பாக்கிய நிலைகளையும் அருளுவார்.
48 தினங்கள் எனப்படும் ஒரு மண்டல காலத்திற்கு ஓர் சிறிய சிவலிங்கத்தினை இல்லத்தில் வைத்து ஸ்ரீ கால பைரவர் அருளிய வண்ணம் ஒவ்வொரு நாளும் ஒரு நாழிகை நேரம் (24 minutes) பூஜிக்க வேண்டும்.
49 ஆவது நாள் திருவண்ணாமலையை அடைந்து அன்பாலய ஆத்ம லிங்க சுழற்சி நிகழ்ச்சியில் பங்கு கொண்டு, சத்குரு அகத்திய மகரிஷிகள் அருளியுள்ள 108 ஆத்ம லிங்கங்களில் ஓர் லிங்கத்தினை அருளாய்ப் பெற்று உங்களுடைய லிங்கத்தோடு ஓர் மஞ்சள் நூலினால் ஒன்பது முறைச் சுற்றி சில பூஜைகளை மேற்கொண்ட பின் இல்லத்திற்கு சென்று 48 தினங்கள் எனப்படும் ஒரு மண்டல காலம் ஒவ்வொரு நாளும் ஸ்ரீ சத்குரு அகத்திய மகரிஷிகள் வழங்கும் அருளுரையினைக் கேட்டு அதன்படி பூஜிக்க வேண்டும். 48 தினங்களில் சத்குரு அகத்திய மகரிஷிகளின் ஆத்ம லிங்கத்தில் உள்ள அளப்பரிய சக்தி நிலைகள் உங்களது தனித்த லிங்கத்திற்கு மாற்றமடையும்.
பிறகு, மீண்டும் திருவண்ணாமலையை அடைந்து சத்குரு அகத்திய மகரிஷிகளின் ஆத்ம லிங்கத்தினை அன்பாலயத்திடம் அன்புடன், பொறுப்புடன் ஒப்படைக்க வேண்டும்.
இறுதி 48 தினங்கள், 108 சக்தி நிலைகள் பிரதிஷ்டை கொண்ட உங்களுடைய தனித்த ஆத்ம லிங்கத்தினை வைத்து 12 தெய்வங்கள் அருளும் வண்ணம் பூஜிக்க வேண்டும்.
பசித்தோருக்கு அன்னம் இடுவது, சூழ்கின்ற பிற ஜீவன்களுக்கு அனுசரணையோடு வாழ்வது போன்ற செயல்களே புண்ணியத்தை ஈட்டித் தரவல்ல செயல்களாக நிலைக்கும் இத்தருணத்தில், கல்கி அவதார நிலைப் பொறுப்பை ஏற்றுள்ள அகத்திய மகரிஷிகளின் ஆத்ம லிங்கங்களை அன்பாய்ப் பணிவாய் சரணாகதத்தோடு ஏற்றுப் பூஜித்தால் உங்களது ஆன்மா விடுதலை பெறுவதோடு மட்டுமல்லாமல், இவ்வுலக ஆன்மாக்கள் அனைத்தும் முக்தி பெற உதவிடும். இந்தக் கிடைப்பதற்கரிய ஆத்ம லிங்க பூஜையை மேற்கொள்பவர்கள் இறைவனுக்கு அருகில் நிலைத்து வாழும் புண்ணியத்தையும் பெறுவர், சிலருக்கோ இறைவனாகவே உருமாறும் பாக்கிய நிலைகள் சித்திக்கும் என்பதில் ஐயமில்லை.
சத்குரு அகத்திய மகரிஷிகள் தனது 108 ஆத்ம லிங்கங்களை 12 முறை வெவ்வேறு 108 அன்பு மானுடர்களுக்கு சுழற்சிச் முறையில் வழங்கிப் பூஜிக்க எடுத்துரைத்துள்ளார்.
அதன்படி கடந்த 2024 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி முதல் துவங்கி இதுவரை ஏழு வெவ்வேறு குழுக்களைச் சார்ந்த 756 (108x7) அன்பு ஆன்மாக்கள் பூஜித்து உள்ளனர். எட்டாவது சுழற்சியைச் சார்ந்த 108 அன்பு ஆன்மாக்கள் சத்குருவின் ஆத்ம லிங்கங்களை இல்லங்களில் வைத்துப் பூஜித்து வருகின்றனர்.
ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி ஒன்பதாவது குழுவில் இணைந்து பூஜிக்க உள்ள 108 அன்பு ஆன்மாக்களுக்கான முதல் நிலை பூஜையான ஓர் தனித்த லிங்கத்தினைத் தங்களது இல்லங்களில் வைத்து வழிபடும் பூஜையானது துவங்க இருக்கிறது.
சத்குரு அகத்திய மகரிஷிகளின் ஆத்ம லிங்கத்தை அருளாய்ப் பெற்று 48 தினங்கள் பூஜிக்க எந்தக் கட்டணமும் இல்லை
இப்பூஜையில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழே உள்ள எண்களில் ஏதேனும் ஒன்றை அழைத்துப் பதிவு செய்யுங்கள் அல்லது பின்வரும் வாட்ஸ்அப் குழுவிற்கான இணைப்பின் மூலம் whatsapp குழுவில் இணைந்து கொள்ளுங்கள். whatsapp குழுவில் இணைந்ததும், எங்களது தன்னார்வலர்களில் ஒருவர் உங்களைத் தொடர்பு கொண்டு உங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து உங்களை இப்பூஜைக்காகப் பதிவு செய்து கொள்வார்.
பூஜைக்குப் பதிவு செய்து அன்பாலய ஆத்ம லிங்க பூஜையின் வாட்ஸ்அப் குழுவில் இணைந்து தினந்தோறும் பகிரப்படும் ஞான அருளுரைகளை அன்போடு கேட்டுப் பூஜைகளை சீராய்ச் செய்பவர்களுக்கு 49 வது நாள், அதாவது வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி, ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலையில் நடைபெறும் ஒன்பதாவது ஆத்ம லிங்க சுழற்சி விழாவின் போது சத்குரு அகத்திய மகரிஷிகளின் ஆத்ம லிங்கமானது 48 தினங்கள் பூஜிக்க வழங்கப்படும்.
ஆறாவது குழுவைச் சார்ந்த 108 அன்பு ஆன்மாக்கள் அகத்தியரின் ஆத்ம லிங்கங்களை ஒரு மண்டல காலப் பூஜையை நிறைவு செய்து சமர்ப்பித்த பின், ஏழாவது குழுவைச் சார்ந்த 108 அன்பு ஆன்மாக்கள் 48 தினங்கள் இல்லத்தில் வைத்து வழிபட பெற்றுச் சென்றனர்.
சத்குரு அகத்திய மகரிஷிகளின் 108 ஆத்ம லிங்கங்ளின் ஏழாவது சுழற்சி விழாக் காணொளி
ஆத்ம லிங்க பூஜை குறித்து மேலும் தகவல்கள் பெற மற்றும் லிங்க பூஜைக்கு பதிவு செய்ய அழைக்கவும்:
ஆத்ம லிங்க பூஜை Helpdesk
SAS. Sangeetha Paramasivam
+91 98409 68377
SAS. Shylu Vijaya Kumar
+91 97887 31427
SAS. Uma Muneeswaran
+91 97379 00559
SAS. Jayshree Srikanth
+91 97890 32199