சாதனா துவங்கும் நாள் : செப்டம்பர் 21
நோன்பு துவங்கும் நாள் : நவம்பர் 20
108 தின சாதனா & 48 தின நோன்பு நிறைவடையும் நாள்: ஜனவரி 6 - சத்குரு அகத்தியர் குரு பூஜை தினத்தன்று.
ஆத்ம லிங்க பூஜையை நிறைவு செய்த சத்குரு அகத்திய மகரிஷிகளின் சீடர்கள் (Batch 1 - 10) அனைவரும் 108 தினங்கள் சாதனாவை மேற்கொள்ள அகத்திய மஹரிஷிகள் எடுத்துரைத்துள்ளார்.
11 வது குழுவில் ஆத்ம லிங்க பூஜையைச் செய்துகொண்டிருக்கும் அன்புச் சீடர்கள் 96 நாள் ஆத்ம லிங்க பூஜையை நிறைவு செய்த பிறகு, நவம்பர் 20 ம் தேதி துவங்கும் 48 தின ஆத்ம காயத்ரி நோன்பை மேற்கொள்ளச் சத்குரு அகத்திய மஹரிஷிகள் எடுத்துரைத்துள்ளார்.
ஆத்ம லிங்க பூஜையை ஏற்காத அன்பு பக்தர்கள் நவம்பர் 20 ம் தேதி துவங்கும் 48 தின ஆத்ம காயத்ரி நோன்பை மேற்கொள்ளச் சத்குரு அகத்திய மஹரிஷிகள் எடுத்துரைத்துள்ளார்.
முதலில் பதிவு செய்பவர்களுக்கு ஸ்ரீ சக்கர யந்திரம் முன்னதாக அனுப்பி வைக்கப்படும்.
இந்த வழிபாட்டை, 108 தின சாதனாவாகவும் 72, 48, 24,12, 3 தின நோன்பாகவும் மேற்கொள்ளலாம் என சத்குரு எடுத்துரைத்துள்ளார். எனினும் 108 தின சாதனாவாக மேற்கொள்பவர்களே வீரிய பலனடைவர் என்பதையும் எடுத்துரைத்துள்ளார்.
முதலில் பதிவு செய்பவர்களுக்கு ஸ்ரீ சக்கர யந்திரம் முன்னதாக அனுப்பி வைக்கப்படும்.
ஸ்ரீ சக்கரத்தையும், ஆத்ம லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்யும் முறை.
(முதல் நாள்)
1. மஞ்சள் கொண்டு ஆதிமூல கணபதியை உருவாக்கி ஒரு ஆசனத்தில் வைத்துவிட்டு, உள்ளங்கையில் நீர் எடுத்து, "ஓம் கம் கணபதயே நமஹ," என 3 முறை உரைத்து விக்னங்களும் தடைகளும் தோன்றாது பூஜைகள் நிறைவேற வேண்டும் எனப் பிரார்த்தித்த பின்னர் நிலத்தில் இடவும். பின்னர் கணபதி காப்பு மந்திரத்தை 3 முறை உரைக்கவும்.
2. சிறிய மர கனசதுரத்தை(wooden cube) தாம்பாளத்தில் நடுவில் வைத்து அதன் மீது ஸ்ரீசக்கரத்தை வைக்கவும். நீர் , பால், பழச்சாறு போன்ற எண்ணற்ற திரவப் பொருட்களால் அபிஷேகம் செய்யவும். பின்னர் வெண்மை நிறத் தூய பருத்தி ஆடை கொண்டு அவற்றைச் சுத்தம் செய்ய வேண்டும்.
3. ஒரு பெரிய பலகையை வைத்து, அதன் மேல் அபிஷேகம் செய்த ஒரு சிறிய மரத்தால் ஆன கனசதுரத்தை (wooden cube) வைத்து, அதற்கு மேல் ஸ்ரீசக்கரத்தை வைக்கவும்.
4. மஞ்சள் மற்றும் குங்குமத்தை ஸ்ரீசக்கரத்தின் மத்தியில் வைத்து வணங்கிய பின்னர் உங்களுடைய ஆத்ம லிங்கத்தை ஸ்ரீசக்கரத்தின் மத்தியில் வைத்து மஞ்சள் குங்குமத்தால் அலங்கரிக்கவும்.
5. ஸ்ரீ சக்கரத்தின் நான்கு முனைப் பகுதிகளிலும் மஞ்சள் குங்குமம் வைத்து வணங்கவும். நான்கு முனைப் பகுதிகளிலும் 9 அக்ஷதையை இட்டு வணங்கி பிரதிஷ்டை நிகழ்வை நிறைவு செய்யவும்.
ஒரு முறை ஸ்ரீ சக்கரம் மற்றும் ஆத்ம லிங்கத்தை பிரதிஷ்டை செய்ததும், மீண்டும் ஸ்ரீ சக்கரம் மற்றும் ஆத்ம லிங்கத்தை அகற்றுவது, மலர் இடுவது, சுத்தம் செய்வது, மஞ்சள், குங்குமம், அக்ஷதை நீக்கி மீண்டும் புதிதாய் வைப்பது என எதனையும் மேற்கொள்ளக் கூடாது. ஒரே ஒரு முறை தான் மேல் கூறிய வழிமுறைகளைச் செய்ய வேண்டும்.
1. சூரிய உதய நாழிகையில், உள்ளங்கையில் நீர் எடுத்து, "ஓம் கம் கணபதயே நமஹ," என 3 முறை உரைத்து நிலத்தில் இடவும். பின்னர் கணபதி காப்பு மந்திரத்தை 3 முறை உரைக்கவும். 3 முறை பிராணாயாமம் செய்த பின்னர் 11 முறை தோப்புக்கரணம் இடவும், இயன்றவர்கள் 108 முறை செய்யலாம்.
2. கீழே உள்ள பலகையின் மேல், ஸ்ரீ சக்கரத்தின் பக்கவாட்டுப் பகுதிகளில் 4 அகல் விளக்குகளை உள்முகமாகப் பொருத்தவும். தீபத்தின் அக்னி ஸ்ரீ சக்கரத்தில் படாமல், அதன் வெப்பம் மட்டும் படும் வண்ணம் பொருத்திக்கொள்ளவும். (மெல்லிய சுடராகப் பொருத்திக்கொள்ளுங்கள்)
3. நான்கு விளக்குகளைச் சுற்றி மலர்களைச் சமர்ப்பிக்கவும். (ஸ்ரீ சக்கரத்தின் மீது சமர்ப்பிக்கக் கூடாது)
4. 108 தின சாதனாவை மேற்கொள்பவர்கள் உள்ளங்கையில் சிறிது நீரெடுத்து, கருணை எனும் வாயில் திறவுகொள்ள வேண்டும் எனப் பிரார்த்தித்து நிலம் விடுக்க வேண்டும். மற்ற அனைவரும் உலக ஆன்மாக்கள் அனைத்தும் விடுதலை பெற வேண்டும் எனப் பிரார்த்தித்து நீர் எடுத்து நிலம் விடவும்.
5. பின்னர், ஆத்ம காயத்ரி மந்திரத்தினை 12 முறை ஆழமாய் உரைக்க வேண்டும்.
6. மீண்டும், உள்ளங்கையில் நீர் எடுத்து, "ஓம் ஸ்ரீ கல்கி அகத்தீசாய நமோ நமஹ," என்று போற்றித் துதித்து நிலம் விடுத்து குருவினை வணங்கவும்.
7. பின்னர் 108 முறை ஆதி விளக்கு காயத்ரி மந்திரத்தினை ஒரு நாழிகை நேரத்திற்கு உரைக்க வேண்டும்.
8. மூன்று முறை, "ஆதி சக்தியே போற்றி", என்றே உரைத்துச் சிறுதுளி நீரெடுத்து நிலம் சமர்ப்பிக்க வேண்டும்.
9. மூன்று முறை, "ஆதி லக்ஷ்மியே போற்றி", என்றே உரைத்துச் சிறுதுளி நீரெடுத்து நிலம் சமர்ப்பிக்க வேண்டும்.
10. மூன்று முறை, "ஆதி சரஸ்வதியே போற்றி", என்றே உரைத்துச் சிறுதுளி நீரெடுத்து நிலம் சமர்ப்பிக்க வேண்டும்.
11. சிறிது நேரம் கண்களை மூடி அமர்ந்து, பிரபஞ்சப் பேராற்றல்களும் முப்பெரும் தேவியரின் பூரண ஆற்றல்களும், பாதரசம், வெள்ளி, தங்கம் மற்றும் தாமிரம் ஆகிய நான்கு வித ஒளிக்கற்றைகளும் அபரிமிதமாய் ஈர்க்கப்பட்டு ஸ்ரீ சக்கரத்தினிலும், உங்களது ஆன்மாவிலும் உயிரினிலும் பிரதிஷ்டை கண்டு நிறைவதைக் கண்காணித்துத் தியானியுங்கள்.
12. ஆத்ம காயத்ரி மந்திரத்தினை மீண்டும் 12 முறை உரைக்க வேண்டும். உரைத்த பின்னர் மீண்டும் நீரெடுத்து நிலம் விடுக்க வேண்டும்.
13. ஆத்மலிங்க ரூபத்தினை ஆழமாய்த் தொழுது, 108 ஆத்மத் துளிகளைப் போற்றும் அஷ்டோத்திரத்தினை உரைக்க வேண்டும். ஒவ்வொரு ஆத்ம துளிகளின் நாமத்தினை உரைக்கும் தருணத்திலும், அவ்வாற்றல்கள் சிரசினில் மின் அலைகளாய்ப் பாய்ந்து, பல்கிப் பெருகி பல்வேறு பதிவுகள் நீங்கிக் குருதியானது நீர்த்து மேலேற்றம் காண்பது போன்று உணர்ந்து தியானிக்க வேண்டும். (ஆத்ம லிங்க பூஜை மேற்கொண்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும்,)
14. மீண்டும் சிறிது நீர் எடுத்து நிலம் விடுத்து நிறைவு செய்திடல் வேண்டும்.
15. இறுதியாக, பல மணித்துளிகள் விழிகளை மூடிய நிலையில் சிரசினில் நிகழ்கின்ற மாற்றங்களை உணர வேண்டும்.
16. தினந்தோறும் எண்ணற்ற நபர்களுக்கு ஆத்ம காயத்ரி மந்திரத்தை எடுத்துரைத்து, அவர்கள் அம்மந்திரத்தை அனுதினமும் பதினோரு முறை ஜெபிக்க எடுத்துரைக்க வேண்டும்.
17. இரவு உறங்குவதற்கு முன்னர் ஸ்ரீ கிருஷ்ணரால் அருளப்பட்ட சரணாகத தியானத்தை மேற்கொள்ள வேண்டும்.
18. சாதனா காலம் முழுவதும் சாத்வீக உணவை ஸ்ரீ சக்கரத்திற்கு அர்ப்பணித்த பின்னரே உண்ண வேண்டும். (வழக்கமாக உட்கொள்ளும் உணவின் அளவில் சரிபாதி அளவு உணவை மட்டுமே ஏற்றுக்கொள்ளச் சத்குரு எடுத்துரைத்துள்ளார்)
முதலில் பதிவு செய்பவர்களுக்கு ஸ்ரீ சக்கர யந்திரம் முன்னதாக அனுப்பி வைக்கப்படும்.
1. சாதனாவின் போது மாமிசம் உண்ணலாமா?
உண்ணாமல் இருந்தால் மிகுந்த பலனைத் தரும்.
2. இந்த பூஜையின் போது தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா?
விரதம் மேற்கொள்ள முயற்சித்தால் மிகுந்த ஞானத்தை இப்பூஜை அளிக்கும்.
3. சாதனாவைச் சூரிய விடியல் நேரத்தில் செய்ய முடியாவிட்டால் மற்ற நேரங்களில் செய்யலாமா?
சூரிய விடியல் பொழுதுகளுக்கு முன்னதாக பூஜைகளைச் செய்தால் மிகுந்த பலனைத் தரும், இயலாதவர்கள் மற்ற நேரத்தில் செய்யலாம்.
4. மாதவிடாய் காலங்களில் சாதனாவை செய்யலாமா?
விளக்கினைப் பொருத்தாமல் உங்களது மந்திர உச்சாடனத்தை நீங்கள் மேற்கொள்ளலாம், இருப்பினும் லிங்கத்தையோ அல்லது யந்திரத்தையோ தொடாமல் தியானிக்க அகத்தியரால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
5. இல்லத்தில் மற்றவர்கள் மாமிசம் சாப்பிடலாமா?
எந்தத் தடையும் இல்லை.
6. ஏதேனும் சில தினங்கள் பிரயாணத்தின் காரணமாக சாதனாவை செய்யாமல் விட்டு விட்டேன்?. நான் மீண்டும் தொடரலாமா?
நிச்சயம் தொடரலாம்.
7. 108 தின ஆத்ம காயத்ரி சாதனாவை எவ்வாறு நிறைவு செய்வது?
இது குறித்து ஸ்ரீ சத்குரு அகத்தியர் மகரிஷிகள் விரைவில் எடுத்துரைப்பார்.
8. சாதனா காலத்தில் மது அருந்தலாமா?
அருந்தாமல் இருப்பது மிகுந்த பலனைத் தரும்.
9. வெளியூர் பிரயாணத்திற்குச் செல்வதாக இருந்தால் யந்திரத்தை எடுத்துச் செல்லலாமா?
யந்திரத்தை இல்லத்திலேயே வைத்துவிட்டு நீங்கள் பிரயாணத்துக்கு செல்லலாம், தினந்தோறும் மானசீகமாக கண்களை மூடித் தியான நிலையில் (கற்பனையில் கண்டு) உங்களது பூஜையினை மேற்கொள்ளலாம். (உங்களது யந்திரத்திற்கு மற்ற யாரும் விளக்குகளை பொருத்தக்கூடாது)
10. இது வரை ஆத்ம லிங்க பூஜையைச் செய்யாதவர்கள் இந்த சாதனாவை மேற்கொள்ளலாமா?
48 தினங்கள் ஆத்ம லிங்கத்திற்கு பதில் மஞ்சள் பிள்ளையாரை யந்திரத்தின் மத்தியில் வைத்து நோன்பை மேற்கொள்ளலாம் என சத்குரு அகத்திய மகரிஷிகளால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
11. 48 தின ஆத்ம காயத்ரி நோன்பு துவங்கும் தேதி என்ன ?
நவம்பர் 20ம் தேதி 48 தின நோன்பு துவங்குகிறது.
12. ஆத்ம லிங்க பூஜையை ஏற்காத பக்தர்கள் ஸ்ரீசக்கரத்தின் மத்தியில் தினந்தோறும் ஒரு புது மஞ்சள் பிள்ளையாரை வைக்க வேண்டுமா ?
இல்லை. நாள் தோறும் பூஜைகளைத் துவங்குவதற்கு முன்னர், முதல் நாள் வடித்த பிள்ளையாரை, சில துளி நீர் சேர்த்து அதில் ஏற்படும் வெடிப்புகளைச் சீரமைத்துப் புதுப்பிக்கவும்.
13. நான் இப்பொழுது 11வது குழுவில் இணைந்து ஆத்ம லிங்க பூஜையை செய்து வருகின்றேன், நான் 48 தின ஆத்ம காயத்ரி சாதனாவை மேற்கொள்ளலாமா?
96 நாள் ஆத்ம லிங்க பூஜை நிறைவடைந்ததும் நவம்பர் 20ம் நாள் துவங்கி ஆத்ம காயத்ரி நோன்பை தாங்கள் மேற்கொள்ளலாம்.
14. இறுதி நாள் சாதனா/நோன்பு நிறைவடைந்ததும் மஞ்சள் பிள்ளையாரை என்ன செய்ய வேண்டும்?
மஞ்சள் பிள்ளையாரை நீரினில் கரைத்து கால் படாத மண் பரப்பில் சேர்த்து விடுங்கள்
15. சாதனா நிறைவடைந்ததும், ஸ்ரீசக்ரத்தை என்ன செய்ய வேண்டும்?
பூஜை அறையில் வைத்து உங்களது வழக்கமான இல்ல பூஜையின் போது பிரார்த்தித்தால் போதுமானது.
16. குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித் தனி ஸ்ரீ சக்கர யந்திரத்தை வைத்து பூஜிக்க வேண்டுமா ?
ஆம். ஒவ்வொருவரும் தனித் தனி யந்திரத்தை வைத்து அதன் மத்தியில் தங்களது ஆத்ம லிங்கத்தை மட்டும் வைக்க வேண்டும். ஆத்ம லிங்க வழிபாடு புரியாதவர்கள் தனித் தனி யந்திரத்தின் மேல் தனித் தனி மஞ்சள் பிள்ளையாரை வைத்து சாதனாவை மேற்கொள்ளவேண்டும்.
17. உறவினர் எவரேனும் இறந்துவிட்டால், சாதனாவினை தொடர்ந்து மேற்கொள்ளலாமா?
இல்லத்தில் இறப்பு நடந்திருந்தால் 11 நாட்களும், இல்லம் தவிர புறத்தில் நெருங்கிய உறவுகளின் மரணம் நிகழ்ந்திருந்தால் 3 நாட்கள் விளக்குகளை பொருத்தாமல் சாதனாவை மேற்கொள்ளவும்.
18. சாதனா நிறைவடைந்ததும் யந்திரத்தில் இடப்பட்ட அக்ஷதையை என்ன செய்ய வேண்டும்?
மஞ்சள் அக்ஷதைகள், பொன் நிறமாகவோ அல்லது வெண்ணிறமாகவோ உருமாறி இருக்கும். அதனை ஒரு தாவரத்தின் கீழ், நீர் எடுத்து நிலம் விடுத்து சமர்ப்பித்துவிட வேண்டும்.
19. விளக்குகளைத் தினந்தோறும் தூய்மை செய்யலாமா ?
செய்யலாம்.
20. தினந்தோறும் ஸ்ரீ சக்கரத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் மலர்கள் சமர்ப்பிக்க வேண்டுமா?
அவசியம் இல்லை. மலர்கள் சமர்பிக்காமல் பூஜைகளை மேற்கொள்ளலாம். மலர்கள் சமர்ப்பிக்க விரும்புபவர்கள், மலர்கள் ஸ்ரீ சக்கரத்தை தீண்டாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
21. தீபங்களின் சுடர் எப்படி இருக்க வேண்டும்?
மெல்லிய சுடராகப் பொருத்திக்கொள்ளுங்கள்
22. நாங்களாகவே யந்திரத்தை வாங்கி கொள்ளலாமா?
வாங்கி கொள்ளலாம். அதனை ஒரு ஸ்ரீசக்கரத்தைப்ச பூஜிக்கும் ஆலயத்தில் வைத்து குங்கும ஆராதனை செய்த பிறகு சாதனாவிற்குப் பயன்படுத்தவும்.
23. நான் ஏற்கனவே என் வீட்டில் வைத்திருந்த யந்திரத்தை பயன்படுத்தலாமா ?
இது வரை நீங்கள் பூஜித்த யந்திரத்தின் நோக்கம் வேறு. இந்த சாதனாவின் நோக்கம் வேறு. உயிர் ஒடுங்கி கருணை வாயில் துல்லியமாய்த் திறவுகொள்ள வேண்டுமெனில் புதியதோர் யந்திரத்தை பயன்படுத்த வேண்டும்.
24. அன்பாலயத்தில் வழங்கும் யந்திரத்தை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டுமா?
இல்லை. அகத்தியர் வழிகாட்டிய வண்ணம் 16cm x 16cm, 160 கிராம்களுக்கும் அதிகமான எடை உடைய ஸ்ரீ யந்திரம் தயாரிக்கப்பட்டு, ஸ்ரீ காஞ்சி காமாட்சி ஆலயத்தில் வைத்து வழிபாடு நிகழ்த்திய பிறகே அனைவருக்கும் அனுப்பப்படுகிறது. தாங்களாக வாங்கிக் கொள்பவர்கள் அளவு மற்றும் எடையை சரியாக கவனித்து வாங்கிக் கொள்ளுங்கள். எனினும் அதனை ஒரு ஸ்ரீ சக்கர வழிபாடு நடைபெறும் கோவிலில் வைத்துக் குங்கும ஆராதனை மேற்கொண்ட பின்னர் சாதனாவிற்குப் பயன்படுத்தவும்.
25. எனக்கு அகத்தியர் உரைத்த அளவுகளில் யந்திரம் கிடைக்கவில்லை என்ன செய்வது?
அன்பாலயத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது கிடைக்கும் யந்திரத்தை வாங்கி முழு மனதோடு சாதனாவை துவங்கவும்.
26. மர ஆசனமான கனசதுரத்திற்கு ஏதேனும் அளவீடு உண்டா ?
ஸ்ரீ சக்கரத்தின் நீள, அகலத்தில் சரி பாதி இருப்பின் உத்தமம். எனினும் இயலாத பட்சத்தில் ஸ்ரீசக்கர அளவைக் காட்டிலும் குறைந்து இருக்க வேண்டும்.
27. பூஜை அறையை சுத்தம் செய்யும்போது, ஸ்ரீ யந்திரத்தை நகர்தலாமா?
சாதனா காலம் முழுவதும் ஸ்ரீ யந்திரத்தை நகர்த்தக் கூடாது.
28. இந்த பூஜை குறித்து தற்போது தான் அறிந்துகொண்டேன், நான் இந்த பூஜையை மேற்கொள்ளலாமா?
ஏற்கலாம். ஜனவரி 6ம் தேதிக்கு முன்னர் எப்பொழுது வேண்டுமானாலும் சாதனாவைத் துவங்கி, ஜனவரி 6 ஸ்ரீ சத்குரு அகத்திய மஹரிஷிகள் குருபூஜை தினத்தன்று நிறைவு செய்யலாம்.
29. குழந்தைகள் இந்த பூஜையை ஏற்கலாமா?
48 தினங்கள் எனப்படும் ஒரு மண்டல காலம் ஏற்கலாம். ஸ்ரீ யந்திரத்தை பிரதிஷ்டை செய்து அதன் மத்தியில் மஞ்சள் பிள்ளையாரை வைத்து, ஆத்ம காயத்ரி மந்திரம் மூன்று முறையும், ஆதிவிளக்கு காயத்ரி மந்திரத்தை 12 முறை உரைத்தால் போதுமானது.
30. எது சாத்வீக உணவு?
சமைத்த உணவை, சூடு ஆறுவதற்கு முன்னர் உண்ண வேண்டும், நிலத்திற்குக் கீழ் வளரும் காய்கறிகளைத் தவிர்க்க வேண்டும். பழைய உணவுகளைத் தவிர்க்க வேண்டும். காய் மற்றும் கனிகளை சமைக்காமலும் உண்ணலாம். நெய்யை உணவில் சேர்த்துக்கொண்டால், தீய உஷ்ணக் கழிவுகள் நீங்கும். விடியலில் சூடேற்றம் கண்ட நீரில் தேன் கலந்து ஸ்ரீ சக்கரத்திற்கு அர்ப்பணித்து உண்டு வர தேக உபாதைகள் நீங்கும். எனினும் உள்ளத்தின் தூய்மையே உணவுத் தூய்மையைக் காட்டிலும் உயர்ந்தது என்பதை நினைவில் கொள்ளவும்.
31. சரணாகத தியானம் அவசியம் இரவு செய்ய வேண்டுமா?
இரவு உறங்குவதற்கு முன் சரணாகத தியானத்தை மேற்கொண்டு, விடியலில் ஸ்ரீ சக்கர வழிபாடு புரிகையில் மிகுந்த பலனை நல்கும்.
32. தினந்தோறும் மஞ்சள் பிள்ளையாரை வடித்து சாதனாவைத் துவங்க வேண்டுமா?
இல்லை. முதல் நாள் மட்டும் பிள்ளையார் வடித்து வைத்து வணங்கினால் போதுமானது. மற்ற நாட்களில், நீர் எடுத்து நிலம் விடுத்து வணங்கினால் போதுமானது.
33. விளக்கிற்கு என்ன எண்ணெயை பயன்படுத்த வேண்டும்?
உங்கள் உள்ளம் உரைப்பது போல் எந்த எண்ணெயையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
34. என்னிடம் கனசதுரத்தை (wooden cube) வைப்பதற்கு பலகை ஏதும் இல்லை, என்ன செய்வது?
பெரிய பலகை இல்லாதவர்கள், ஸ்ரீ சக்கரத்தின் ஆசனமான சிறிய கனசதுரத்தை (wooden cube) நேரடியாக தரையில் வைத்து அதன் மேல் ஸ்ரீ சக்கரத்தை வைக்கலாம்.
முதலில் பதிவு செய்பவர்களுக்கு ஸ்ரீ சக்கர யந்திரம் முன்னதாக அனுப்பி வைக்கப்படும்.
கணபதி காப்பு
“இறைப்பயணமாம் அகப்பயணம்
துல்லியமாய் நிகழ்ந்தேறிட
தும்பிக்கை எனும் நம்பிக்கை கொண்டு
ஒளிப்பாலம் அமைத்தருள்வாய்
சிந்தாமல் சிதறாமல் மனமதுவும் தியானிக்க
கருணை எனும் காப்பிடுவாய்
ஆதிமூல கணபதியே
மன்றாடித் தொழுகின்றேன்
மரகத வடிவாய் எழுந்தருள்வாய்”
சிவத் துளிகளின் அஷ்டோத்திர சத நாமாவளி
1. ஓம் ஸ்ரீ ருத்ரனே போற்றி
2. ஓம் ஸ்ரீ வீரபத்ரனே போற்றி
3. ஓம் ஸ்ரீ மகேசனே போற்றி
4. ஓம் ஸ்ரீ சதாசிவனே போற்றி
5. ஓம் ஸ்ரீ சரபேஸ்வரரே போற்றி
6. ஓம் ஸ்ரீ சந்திரசேகரனே போற்றி
7. ஓம் ஸ்ரீ கங்காதரனே போற்றி
8. ஓம் ஸ்ரீ பசுபதியே போற்றி
09. ஓம் ஸ்ரீ நீலகண்டனே போற்றி
10. ஓம் ஸ்ரீ மாத்ருபூதமே போற்றி
11. ஓம் ஸ்ரீ மஹா மாயனே போற்றி
12. ஓம் ஸ்ரீ சோமாஸ்கந்தரே போற்றி
13. ஓம் ஸ்ரீ சைலேந்திரரே போற்றி
14. ஓம் ஸ்ரீ மார்கபந்துவே போற்றி
15. ஓம் ஸ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜெயரே போற்றி
16. ஓம் ஸ்ரீ யோகேஸ்வரரே போற்றி
17. ஓம் ஸ்ரீ மஹா காலனே போற்றி
18. ஓம் ஸ்ரீ தியாகேசனே போற்றி
19. ஓம் ஸ்ரீ லிங்கோத்பவரே போற்றி
20. ஓம் ஸ்ரீ சங்கரனே போற்றி
21. ஓம் ஸ்ரீ ஞானேஸ்வரரே போற்றி
22. ஓம் ஸ்ரீ பரமேஸ்வரரே போற்றி
23. ஓம் ஸ்ரீ கபாலீஸ்வரரே போற்றி
24. ஓம் ஸ்ரீ பிராணநாதரே போற்றி
25. ஓம் ஸ்ரீ ஆத்மநாபரே போற்றி
26. ஓம் ஸ்ரீ நாகேஸ்வரரே போற்றி
27. ஓம் ஸ்ரீ அருணாசலேஸ்வரரே போற்றி
28. ஓம் ஸ்ரீ சஹஸ்ர லிங்கேஸ்வரரே போற்றி
29. ஓம் ஸ்ரீ காமேஸ்வரரே போற்றி
30. ஓம் ஸ்ரீ நிர்மலேஸ்வரரே போற்றி
31. ஓம் ஸ்ரீ சண்டிகேஸ்வரரே போற்றி
32. ஓம் ஸ்ரீ விஸ்வேஸ்வரரே போற்றி
33. ஓம் ஶ்ரீ பஞ்சாக்ஷரரே போற்றி
34. ஓம் ஸ்ரீ தாண்டவமூர்த்தியே போற்றி
35. ஓம் ஸ்ரீ பரகாயரே போற்றி
36. ஓம் ஸ்ரீ அக்னீஸ்வரரே போற்றி
37. ஓம் ஸ்ரீ ஜோதிஸ்வரூபனே போற்றி
38. ஓம் ஸ்ரீ காலபைரவரே போற்றி
39. ஓம் ஸ்ரீ அகத்தீஸ்வரரே போற்றி
40. ஓம் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரரே போற்றி
41. ஓம் ஸ்ரீ லோகேஸ்வரனே போற்றி
42. ஓம் ஸ்ரீ டமரூபனே போற்றி
43. ஓம் ஸ்ரீ சூர்யலிங்கேஸ்வரரே போற்றி
44. ஓம் ஸ்ரீ வாயுலிங்கேஸ்வரரே போற்றி
45. ஓம் ஸ்ரீ கோரக்க ஈஸ்வரரே போற்றி
46. ஓம் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரரே போற்றி
47. ஓம் ஸ்ரீ சூன்ய லிங்கேஸ்வரரே போற்றி
48. ஓம் ஸ்ரீ ப்ரம்மேஸ்வரரே போற்றி
49. ஓம் ஸ்ரீ சர்வேஸ்வரரே போற்றி
50. ஓம் ஸ்ரீ சுடலையாண்டி ஈஸ்வரரே போற்றி
51. ஓம் ஸ்ரீ கைலாயநாதரே போற்றி
52. ஓம் ஸ்ரீ சிவலோகநாதரே போற்றி
53. ஓம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியே போற்றி
54. ஓம் ஶ்ரீ நடராஜ மூர்த்தியே போற்றி
55. ஓம் ஸ்ரீ வஜ்ரேஸ்வரரே போற்றி
56. ஓம் ஸ்ரீ பீமேஸ்வரரே போற்றி
57. ஓம் ஸ்ரீ திகம்பரேஸ்வரரே போற்றி
58. ஓம் ஸ்ரீ திவ்யஸ்வரூப ஈஸ்வரரே போற்றி
59. ஓம் ஸ்ரீ மல்லிகேஸ்வரரே போற்றி
60. ஓம் ஸ்ரீ மருத ஈஸ்வரரே போற்றி
61. ஓம் ஸ்ரீ அஷ்ட லிங்கேஸ்வரரே போற்றி
62. ஓம் ஸ்ரீ ஷோடச லிங்கேஸ்வரரே போற்றி
63. ஓம் ஸ்ரீ கனக சபேஸ்வரரே போற்றி.
64. ஓம் ஸ்ரீ தாமிர சபேஸ்வரரே போற்றி
65. ஓம் ஸ்ரீ ஆதி சிவனே போற்றி
66. ஓம் ஸ்ரீ ஆதி சக்தியே போற்றி
67. ஓம் ஸ்ரீ மச்சேந்திரே போற்றி
68. ஓம் ஸ்ரீ கணநாதரே போற்றி
69. ஓம் ஸ்ரீ ஏகனே போற்றி
70. ஓம் ஸ்ரீ விஸ்வகர்மா போற்றி
71. ஓம் ஸ்ரீ புதன் தேவரே போற்றி
72. ஓம் ஸ்ரீ பிரகஸ்பதியே போற்றி
73. ஓம் ஶ்ரீ சுக்ராச்சாரியாரே போற்றி
74. ஓம் ஸ்ரீ இந்திர தேவரே போற்றி
75. ஓம் ஸ்ரீ குபேரரே போற்றி
76. ஓம் ஸ்ரீ மந்தகாசினியே போற்றி
77. ஓம் ஸ்ரீ தபோதனரே போற்றி
78. ஓம் ஸ்ரீ சிற்பன்னரே போற்றி
79. ஓம் ஸ்ரீ ரசனாகரரே போற்றி
80. ஓம் ஸ்ரீ பஞ்சானந்தரே போற்றி
81. ஓம் ஸ்ரீ கருப்பண்ணசாமியே போற்றி
82. ஓம் ஶ்ரீ மாகாளியே போற்றி
83. ஓம் ஸ்ரீ பூதேவியே போற்றி
84. ஓம் ஸ்ரீ வெற்றிவீரனே போற்றி
85. ஓம் ஸ்ரீ பராசர மகரிஷிகளே போற்றி
86. ஓம் ஸ்ரீ வியாசர் மகரிஷிகளே போற்றி
87. ஓம் ஸ்ரீ மார்க்கண்டேய மகரிஷிகளே போற்றி
88. ஓம் ஸ்ரீ நாரத மகரிஷிகளே போற்றி
89. ஓம் ஶ்ரீ பிரகலாத மகரிஷிகளே போற்றி
90. ஓம் ஶ்ரீ புலஸ்திய மகரிஷிகளே போற்றி
91. ஓம் ஶ்ரீ சித்ரகுப்த மகரிஷிகளே போற்றி
92. ஓம் ஶ்ரீ ஆதிலட்சுமியே போற்றி
93. ஓம் ஶ்ரீ தனலட்சுமியே போற்றி
94. ஓம் ஶ்ரீ தைர்யலட்சுமியே போற்றி
95. ஓம் ஶ்ரீ கஜலட்சுமியே போற்றி
96. ஓம் ஶ்ரீ சந்தான லட்சுமியே போற்றி
097. ஓம் ஶ்ரீ தான்ய லட்சுமியே போற்றி
098. ஓம் ஶ்ரீ விஜய லட்சுமியே போற்றி
099. ஓம் ஶ்ரீ வித்யா லட்சுமியே போற்றி
100. ஓம் ஸ்ரீ துர்கா தேவியே போற்றி
101. ஓம் ஸ்ரீ அன்னபூரணியே போற்றி
102. ஓம் ஸ்ரீ கமலாயதாட்சியே போற்றி
103. ஓம் ஸ்ரீ நீலாய தாட்சியே போற்றி
104. ஓம் ஸ்ரீ காமாட்சியே போற்றி
105. ஓம் ஸ்ரீ மீனாட்சியே போற்றி
106. ஓம் ஸ்ரீ விசாலாட்சியே போற்றி
107. ஓம் ஸ்ரீ அம்புஜாட்சியே போற்றி
108. ஓம் ஸ்ரீ சண்டிமாதேவியே போற்றி போற்றி!!
முதலில் பதிவு செய்பவர்களுக்கு ஸ்ரீ யந்திரம் முன்னதாக அனுப்பி வைக்கப்படும்.
ஆத்ம காயத்ரி சாதனா குறித்து மேலும் தகவல்கள் பெற மற்றும் ஆத்ம காயத்ரி சாதனாவிற்கு பதிவு செய்ய அழைக்கவும்:
ஆத்ம காயத்ரி சாதனா Helpdesk
SAS. Sangeetha
+91 98409 68377
SAS. Shylu Vijaya Kumar
+91 97887 31427
SAS. Uma Muneeswaran
+91 97379 00559