அன்பாலய அஷ்டோத்திரக் பாராயணக் குழு

அனந்த கோடி அன்புகள்!!!

12 உயர் தெய்வங்களைப் போற்றிப் பாராயணம் செய்ய, அஷ்டோத்திர சத நாமாவளி புத்தகம் அன்பாலயம் வெளியிட்டு அதனை மகாயாகங்களில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாகவும் வழங்கியது.

சாதாரணமாக குடும்ப வாழ்க்கையில் இருக்கும் ஆன்மாக்களுக்கு, இறைத் தொடர்பை வலுவடைய செய்து, உயிரின் ஆசைகள் நிறைவடைந்து, உடல் கொண்டு வாழும் தருணத்திலே மெய்ஞான வாழ்க்கையை வாழ்வதற்கு வழிவகை புரிய, நம் சத்குரு அகத்திய மகரிஷிகளின் வேண்டுகோளுக்கிணங்கி உயர் தெய்வங்களே அவரவர் அஷ்டோத்திரங்களை அருளியுள்ளார்கள். சத்குரு நாதர் தனது அன்பாலயப் பிள்ளைகளுக்கு ஒரு மாபெரும் வரப் பிரசாதத்தை அஷ்டோத்திர சத நாமாவளி என்னும் வடிவில் வழங்கி உள்ளார்.

ஒவ்வொரு தெய்வத்தின் அஷ்டோத்திர சத நாமாவளியை பாராயணம் செய்யும் பொழுதும் அதற்குண்டான பலன்கள் யாது எவ்வாறு பாராயணம் செய்ய வேண்டும் என்கிற முறையினையும் சத்குரு அகத்தியர் மகரிஷிகள் அருளியுள்ளார்கள், இவையும் அஷ்டோத்திர சத நாமாவளி புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

கூட்டாகச் சேர்ந்து பணிந்து, உயர் தெய்வங்களின் பாராயணத்தை நாம் செய்கையில், பாராயணம் உரைத்தலின் பலன்கள் பன்மடங்காக கூடும் என்பதில் ஐயமில்லை. 

உங்கள் பகுதியைச் சேர்ந்த 12 பேர் ஒன்றாகக் கூடி, அன்பாலயத்தின் 12 உயர் தெய்வங்களின் அஷ்டோத்திர சத நாமாவளியைப் பாராயணம் செய்ய விரும்பினால், உங்கள் முகவரிக்கு, சத்குரு அகத்திய மகரிஷிகளின் திருவுருவப்படம் ஒன்று அனுப்பி வைக்கப்படும்.

அனுப்பி வைக்கப்பட்ட அத்  திருவுருவப் படத்தை, ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவர் வீட்டில் வைத்து அம்மாதம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலையில் 6 மணிக்கு, 12 பேரும் ஒன்று கூடி 12 உயர் தெய்வங்களின் அஷ்டோத்திர சத நாமாவளியைப் பாராயணம் செய்து பாக்கியங்கள் பல பெற்றிடலாம்!

12 பேர் கொண்ட ஒரு பாராயணக் குழுவை ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கட்டமைக்கலாம். 

ஒருங்கிணைப்பாளர், உங்கள் பகுதியைச் சார்ந்த 12 பேரை அடையாளம் கண்ட பிறகு அவர்களது பெயர், அலைபேசி எண், முழு முகவரியை கீழ்காணும் விண்ணப்பப் படிவத்தில் பதிவு செய்யவும். 

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ததும் அன்பாலயத்தின் சேவகர் ஒருவர் உங்களை அழைத்து  தேவையான ஆலோசனைகள் செய்த பிறகு உங்கள் 12 பேர் சேர்ந்து ஒரு பாராயணகுழுக்கு உண்டான தொகை Rs 1296  (நபர் ஒருவருக்கு 108 ரூபாய் வீதம் 12 நபர்களும் சேர்த்து Rs 1296) பெற்றுக் கொண்ட பின், குழு உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து பாராயணம் செய்ய ஒரு A3 அளவுள்ள சத்குரு அகத்தியர் மகரிஷிகள் திரு உருவப்படம் மற்றும் 12 அஷ்டோத்திர புத்தகங்களும் மகா சிவராத்திரி தியானத்தில் கலந்துகொள்ளும் ஒருங்கிணைப்பாளருக்கு நேரடியாக பூஜைக்குப்பின் வழங்கப்படும்.  கலந்துகொள்ள இயலாதவர்களுக்கு மகா சிவராத்திரிக்கு பிறகு  அனுப்பி வைக்கப்படும். 

கவனிக்கவும்:

சத்குரு அகத்திய மகரிஷிகளின் அறிவுறுத்தலின்படி, 12 பேர் கொண்ட பாராயணக் குழுவை கட்டமைக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு மட்டுமே மகா சிவராத்திரி அன்று நடைபெறும் தியான வகுப்பிற்கு அனுமதி வழங்கப்படும்.

ஒருங்கிணைப்பாளர் நேரடியாக கற்றுக் கொண்ட தியான வகுப்பை, தன்னுடைய 12 பேர் அடங்கிய பாராயண குழுவுக்கு சொந்த ஊர் திரும்பிய பிறகு கற்றுத்தரலாம்

பாராயணக்  குழுவிற்கான வழிகாட்டு நெறிமுறைகள்


1. பாராயணக் குழுவில் 12 குடும்பத்தின் சார்பாக இணைந்துள்ள 12 நபர்கள், அவர்களது   12 இல்லங்களில் 12 மாதங்கள்  பாராயணம் செய்ய வேண்டும் என்பதுதான் சத்குரு அகத்தியரின் வழிகாட்டுதல், இதனை நடைமுறைப்படுத்த இயலாவிட்டால் 12 நபர்கள் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்களாக கூட இருக்கலாம். 12 மாதங்களும் ஒரே வீட்டில் பாராயணம் நடத்தப்பட்டாலும் அது முறை தான்.

2. வீடுகளில் வைத்து பாராயணம் செய்ய வேண்டும் என்பதே சத்குருவின் உத்தரவு. முடியாத பட்சத்தில் மட்டும்  அருகில் உள்ள கோயிலைத் தேர்வு செய்வதும் முறைதான். வாரம் ஓரு முறை 12 பெரும் ஒன்றுகூடி பாராயணம் செய்யவேண்டும் என்றே அறிவுறுத்தப்பட்டுள்ளது, இருப்பினும் இயலாதவர்கள் மாதம் ஒரு முறை கண்டிப்பாக பாராயணம் செய்திருக்க வேண்டும்.

3. பாராயணம் உரைக்கும் பொழுது 12 பேரும் உரைக்க வேண்டும். வயது வரம்பு தடை கிடையாது. பாராயணக் குழுவை எப்பொழுது வேண்டுமானாலும் துவங்கலாம்.

4. 12 பேரும் சேர்ந்து  வாரத்தின் எந்த ஒரு நாளிலும் பாராயணம் செய்யலாம். 

5. அன்பாலய பாராயண அஷ்டோத்திர சத நாமாவளி புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அஷ்டோத்திரத்தின் பலாபலன்களையும் கூட்டத்தில் எவரேனும் ஒருவர் வாசித்த பின்பு அதற்குண்டான அஷ்டோத்திரங்களைப் பாராயணம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அஷ்டோத்திர பாராயணத்திற்கு முன்பும் அப்பலன்களை ஒருவர் உரக்க வாசிக்க வேண்டும்.

6. பெண்கள் மாதவிடாய் காலங்களிலும் வீட்டில் இருந்தபடி பாராயணம் செய்யலாம்.

7. 12 பேருக்கு குறைவாக இருந்தாலும் நீங்கள் பாராயணத்தைத் துவங்கலாம் இருப்பினும்,12 பேர் முறையாக சேர்ந்து பதிவு செய்த பிறகே அன்பாலயாத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாராயணக் குழுவாக கருதப்படும். அப்படி அங்கீகரிக்கப்பட்ட பாராயண குழுவை பதிவு செய்யும் ஒருங்கிணைப்பாளருக்கு  பல சலுகைகள் உண்டு, அவை  இப்பக்கத்தின் இறுதியில் வழங்கப்பட்டுள்ளது 

8. சத்குரு அகத்தியர் உரைத்த வண்ணம் ஒவ்வொரு நபரிடமும் 108 ரூபாய் பொருளினைப் பெறுவது என்பது  பாராயணத்தின் முக்கியத்துவத்தை, அதன்  புனிதத் தன்மையினை, பாராயண குழு உறுப்பினர்கள் உணர்ந்து ஏற்றிடுவதற்காக மட்டுமே. (ஒருவரே 12 நபர்களுக்கு உண்டான பொருளை ஏற்பாடு செய்யக்கூடாது). ஒவ்வொரு உறுப்பினரிடம் இருந்தும் தனித்தனியாக பெறுதல் வேண்டும்.

9. பாராயண குழுவில் இதுவரை அன்பாலயத்தின் தொடர்பில்லாத அல்லது சத்குரு அகத்திய மகரிஷிகளை வழிபடாத உறுப்பினர்களை சேர்ப்பதே மிகச் சிறப்பு, அதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் அகத்தியரின் ஒளி இழைத் தொடர்பு பெற்ற இறை அன்பர்களையும் பாராயணக் குழுவில் இணைத்துக் கொள்ளலாம். 

10. சத்குரு அகத்திய மகரிஷிகள் உரைத்த வண்ணம் பாராயணக் குழுவில் இடம் பெறும் ஒவ்வொருவரும் தங்கள் பிரார்த்தனைகளை சமர்ப்பித்து நீரினை மும்முறை கையில் ஏந்தி  நிலத்தில் விட்டு மலர்களைச் சமர்ப்பித்த பின்பு அமர்ந்து பாராயணத்தைச் செய்யலாம்.

11. 12 பேருக்கும் குறைவாக இருக்கும் பாராயணக் குழுவைப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை, இருப்பினும், நீங்கள் குறைவான நபர்களை வைத்து பாராயணம் செய்து வருகிறீர்கள் என்பதனை அன்பாலயத்தின் பாராயணக் குழு உதவி தொலைபேசி எண்களை அழைத்து தகவல் அளிக்கவும்

12. ஒருவர் 12 பேர் கொண்ட ஒரு குழுவுக்குத் தான் ஒருங்கிணைப்பாளராக இருந்து செயலாற்ற வேண்டும். உங்களுக்கு 12 நபர்களுக்கு மேல் இருந்தால் மற்றும் ஒர் புதிய குழுவைத் துவங்கவேண்டும், அக்குழுவில் உள்ள எவரேனும் ஒருவர்தான் ஒருங்கிணைப்பாளராக இருந்து  செயல்பட வேண்டும்.

12 பேரை கொண்டு பாராயணக் குழுவை கட்டமைத்து, அன்பாலயத்தில் பதிவு செய்யும்  ஒருங்கிணைப்பாளருக்கு கிடைக்கும் பலன்கள்


1. 12 பேர் கொண்ட ஒரு குழுவை கட்டமைத்து ஆண்டு முழுவதும் சீராக ஒவ்வொரு வாரமும் 12 பேரை சேர்த்து பாராயணம் செய்யும் சேவகர்களுக்கு, இவ்வருடம் நடைபெற உள்ள அன்பாலயத்தின் அனைத்து தியான வகுப்புகளிளும் இலவசமாக கலந்து கொள்ளலாம்.

2. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் ஒரு வார சிறப்பு ஒருங்கிணைப்பாளர் முகாமில் கலந்து கொண்டு பயனடைய இலவச அனுமதி உண்டு.

3. வீட்டில் வைத்து வழிபட, ஆதி சிவனின் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட உள்ள, முதல் 108 ஆதி விளக்குகளை ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.

4. சிறப்பாக செயல்படும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு சத்குரு அகத்திய மகரிஷிகளிடமிருந்து தனிப்பட்ட  அருளுரை மற்றும் தனிப்பட்ட பயிற்சிகளை பெறுவதற்கு உண்டான முயற்சிகள் நடைபெறும்.

5. அன்பாலயத்தில் இவ்வாண்டு வெளியிடப்படும் அனைத்து நூல்களும் 12 பேரை கட்டமைத்த பாராயண குழு ஒருங்கிணைப்பாளருக்கு இலவசமாக வழங்கப்படும்.

6. அன்பாலயத்தால் நடத்தப்படும் தியான வகுப்புகளில் கலந்து கொண்டு, அதனைத் தன்னுடைய பாராயண குழுவுக்கு சிறப்பாக கற்பிக்கும் ஒருங்கிணைப்பாளர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு அன்பாலயத்தின் தியான ஆசிரியர் பொறுப்பு வழங்கப்படும்.

7. இவ்வாண்டில் காருண்யா மூலிகை மையத்தின் மூலம் தயாரிக்கப்படும் மூலிகைகள் 12 பேரை கட்டமைத்த பாராயண குழு ஒருங்கிணைப்பாளருக்கு  இலவசமாக வழங்கப்படும்.

8. காருண்யா மூலிகை மையத்தின் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகளை ஒருங்கிணைப்பாளர்களின் முகவரியில் இருந்து விநியோகிக்கும் அனுமதி வழங்கப்படும்.

9. மாவட்ட வாரியாகத் துவங்க இருக்கும் அன்பாலய மையத்தின் செயற்குழு உறுப்பினராக, பாராயணக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

10. சிறப்பாக செயல்படும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு, மாத மாதம் திருவண்ணாமலையில் நடைபெறும் ஆயில்ய நட்சத்திர அகத்தியர் கிரிவல பாத யாத்திரையை  நிர்வகிக்கும் தலைமை பொறுப்பு  வழங்கப்படும்.

11. ஆண்டுக்கு ஒரு முறை புனித யாத்திரையில் கலந்து கொள்ள முன்னுரிமை வழங்கப்படும்.

அன்பாலய அஷ்டோத்திர பாராயணக் குழுவை பற்றி மேலும் அறிந்து கொள்ள அழைக்கவும்


☎️ Domestic Helpdesk☎️ 

SAS. Shylu

9788731427

SAS Karthika

7305070852

SAS Latha

9962979352

SAS. Premalatha

9655591830


☎️ International Helpline☎️ 


SAS. VijayaKumar 

+91 9791733321

To download Asthothiram, click here 

To dowload Agathiyar picture, Click here