அன்பாலய சித்திரை திருவிழா 2025

அன்பாலய வெளியீடுகள் மற்றும் அன்பாலய தெய்வங்களை போற்றி துதித்துத் கொண்டாடும் வகையில் சில போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இந்த போட்டிகள் மாற்றும் நிகழ்ச்சிகளில் ஆத்ம லிங்க பூஜை மேற்கொண்ட சீடர்கள் 12 குழுக்களாகவும், லிங்க பூஜையை மேற்கொள்ளாதவர்கள் ஒரு குழுவாகவும் மொத்தம் 13 குலுக்களாக (அணிகளாக) பங்குகொள்ளலாம்.

அதாவது, ஒரு பேச்சு போட்டி நடத்தப்பட்டால், அதில் தனி நபராக பங்கு கொள்வதற்கு பதில் ஒரு அணியின் சார்பாக பங்கு கொள்ள வேண்டும். உதாரணமாக ஸ்ரீ கிருஷ்ணர் குழுவை சார்ந்த ஒருவர் அந்த அணியின் சார்பில் பங்குகொள்ளலாம். போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் அணிகளுக்கு இடையே நடைபெறும்.

சித்திரை திருவிழாவில் நடைபெறும் அணைத்து போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளின் இறுதியில் முதல் மூன்று இடங்களை கைப்பற்றும் அணிகளை சார்ந்து போட்டியில் பங்கு பெற்ற அனைவரும்  அந்த அந்த அணியை சார்ந்த தெய்வத்திடமிருந்து தனிப்பட்ட அருளுரை பெறும் பாக்கியம் பெறுவீர்கள். மேலும் வெற்றி கோப்பைகளும் வழங்கப்படும்.